Tuesday 7 March 2017

பாரதி கண்ட புதுமைப் பெண்

நேற்று (மார்ச் 7) ,சர்வதேச மகளிர் தினத்துக்கு யாரைப் பற்றிய வாழ்க்கை தொகுப்பை பற்றி எழுத என்று ஒரு POLL வைத்தேன்.இந்திரா காந்தி,பி.வி .சிந்து ,Dr. முத்துலட்சுமி ரெட்டி என்று தேர்வுகள் கொடுத்திருந்தேன்.


சிலர் என்னுடைய அம்மாவை பற்றி எழுத ஆலோசனை அளித்தார்கள்.அவர்களுடைய விருப்பம் அன்னையை தினத்தன்று(மே 14) கண்டிப்பாக நிறைவேறும்.


இப்போது  Dr. முத்துலட்சுமி ரெட்டியை பற்றி எழுத சொல்லி அதிக ஆதரவு இருப்பதால்  அவருடைய வாழ்க்கை குறிப்புகள் 


“Laws and legislation are there only for sanction. It is up to us women to energize these and implement them into action.” - Dr.Muthu Lakshmi Reddy



Dr.Muthu Laksmi Reddy
(1886-1968)
  • அடையார் புற்றுநோய் மையத்தை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.அதை தன்னுடைய இடை விடாத முயற்சியால் தொடங்கியவர் 
  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்,இந்தியாவின் முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல 'முதல்' பட்டங்களுக்கு சொந்தக்காரர்.
  • "தேவதாசி" என்று பட்டம் சுமத்தப்பட்டு வீட்டை விட்டு வந்த பெண்களுக்காக தனது வீட்டிலேயே "அவ்வை இல்லம்' தொடங்கியவர் 

ஜூலை 30,1886 ல் புதுக்கோட்டை ராஜாங்கத்தில் நாராயண ஸ்வாமி ஐயருக்கும்,சந்திராம்மாவுக்கும் மகளாக பிறந்தார் முத்து லட்சுமி.

பெண்கள் வெளியே செல்வது தவறு என்று கருதப்பட்ட காலத்தில் பிறந்த அவர் தடைகளை தகர்த்தெறிந்து சாதனைகள் புரிந்து தனக்கு அடுத்து வந்த பெண்களுக்கு உதாரணமாகவும் திகழ்ந்தார் 

கையில் file வைத்திருப்பவர் முத்து லட்சுமி 
பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கிய முத்துலட்சுமி  13 வயதிற்கு பிறகு வீட்டிலேயே படிப்பை தொடர்ந்தார்.அவர் மிகவும் நன்றாக படிப்பதே ஊர் முழுக்க பேச்சு. அவர் கல்லூரி படிப்பை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஏனெனில் அந்த ஊரில் இருந்தது ஒரே கல்லூரி.அதுவும் ஆண்கள் கல்லூரி!

அதிக பட்ச மதிப்பெண்களுடன் பள்ளி படிப்பை முடித்த முத்து லட்சுமி நம்பிக்கையுடன் கல்லூரிக்கு விண்ணப்பித்தார்.ஆனால் கல்லூரி நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க மறுத்தது.
 ஒரே ஒரு மாணவியாக மாணவர்களின் மனதை சீரழிப்பார் என்றெல்லாம் காரணம் கூறியது

முற்போக்கு எண்ணம் கொண்டவரான   புதுக்கோட்டை ராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டமான் குறுக்கிட்டு அவரது விண்ணப்பத்தை ஏற்று கொள்ள வைத்தார்.ஒரே ஒரு மாணவியாக கல்லூரி படிப்பை முடித்த முத்து லட்சுமி யின் கனவுகள் மருத்துவ படிப்பை நோக்கி விரிந்தன 

சென்னை மருத்துவ கல்லூரியில் படிப்பை தொடர்ந்த முத்து லட்சுமி சிறப்பாக படித்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை 1912ல்  பெற்றார்.

1914 ல் Dr.சுந்தர ரெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

லண்டனில் தன் படிப்பை தொடர்ந்த போது இந்திய பெண்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று இந்தியா திரும்பிய அவர் Madras Legislative Council ல் Vice President  தேர்ந்தெடுக்கப் பட்டார்.  Madras Legislative Council ல்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி அவரே ஆவார்.
குழந்தைகளுக்காக மற்றும் மகப்பேறுக்காக  மருத்துவமனைகளில் தனி பிரிவு ஆரம்பிக்க காரணமும் அவரே.


Dr Muthulakshmi (Centre) with members and staff of the
Avvai Home
தேவதாசி முறை சட்டத்தால் தடுக்கப்பட்டாலும் அந்த இளம் பெண்களுக்கு தகுந்த இடம் இல்லை.1930 ல் அப்பெண்களுக்காக தன் வீட்டிலேயே அவ்வை இல்லத்தை தொடங்கினார்.இப்போது கணக்கற்ற இளம் பெண்களுக்கு கல்வி நிறுவனம் ஆகவும் செயல் பட்டு உதவிகள் புரிந்து வருகின்றது.


தான்  சகோதரி புற்று நோயால் அகால மரணமடைந்ததிலிருந்து அதற்கான ஒரு சிறப்பு மருத்துவமனையை ஆரம்பிக்க விருப்பம் கொண்ட முத்து லட்சுமி பல் வேறு தடைகளை தகர்த்து 1954 ல் சென்னை அடையார் புற்றுநோய் மையத்தை தொடங்கினார்.இது இந்தியாவில் இரண்டாவதும்,தென் இந்தியாவில் முதலாவதுமான புற்றுநோய் மையம் ஆகும்.தற்போது பல்வேறு வசதிகளை பெற்று மிகவும் பிரபலமாக உள்ளது.

In 1954, Muthu lakshmi with Nehru when he laid stone for Adayar Cancer Institute

Dr.Muthu Lakshmi with Hartog committee members  
பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் , Immoral Traffic Control Act (1956) ஆகிய சட்டங்களை கொண்டு வந்ததில் அவரது பங்கு அதிகம்.










தனது 81 வயதில் (1968) ல் முத்துலட்சுமி காலமானார்.ஆனால் அவர் செய்த நல்ல  விஷயங்களின் பலனை இன்றும் உணர்கிறோம்.அதில் அவர் வாழ்ந்து வருகிறார்.


Dr.Muthu Lakshmi's bust at Adayar cancer institute